பொது செய்தி

தமிழ்நாடு

'விதை' விநாயகர்... இனி, வீடுகள் எங்கும்!

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;விநாயகர் சதுர்த்தி தினத்தில், வீடுகளில், விதை விநாயகர் சிலைகளை வைத்து, இயற்கையுடன் இணைந்து வழிபடுவதை, பக்தர்கள் பலர் விரும்புகின்றனர்; இதற்கேற்ப, திருப்பூரில், இந்த சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.வரும் 10ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது; அன்று, பலரும், தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து சதுர்த்தி விழா கொண்டாடுவது வழக்கம்.'பிளாஸ்ட்
 'விதை' விநாயகர்... இனி, வீடுகள் எங்கும்!

திருப்பூர்;விநாயகர் சதுர்த்தி தினத்தில், வீடுகளில், விதை விநாயகர் சிலைகளை வைத்து, இயற்கையுடன் இணைந்து வழிபடுவதை, பக்தர்கள் பலர் விரும்புகின்றனர்; இதற்கேற்ப, திருப்பூரில், இந்த சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.வரும் 10ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது; அன்று, பலரும், தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து சதுர்த்தி விழா கொண்டாடுவது வழக்கம்.'பிளாஸ்ட் ஆப் பாரீஸ்' உள்ளிட்ட ரசாயன கலவையிலான சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; மண் சிலைகளுக்கு தான் தனி மரியாதை. வீடுகளில் வழிபாடு நடத்திய பின், சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.சில ஆண்டுகளாக, விதை விநாயகர் சிலைகளை வழிபட்டு, வீட்டிலேயே பூந்தொட்டியில் கரைத்து செடி, கொடி வளர்ப்பதையே மக்கள் விரும்புகின்றனர். இதுவரை இல்லாத அளவு, நடப்பாண்டு விதை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.வரும், 10ம் தேதி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விதை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துவிட்டன.சிலை தயாரிக்கும் போது, நாட்டு மரங்கள், செடி, கொடிகள், மூலிகை வகைகளில் விதைகளுடன் சிலை தயாரிக்கப்படுகின்றன.விநாயகர் சிலை தயாரிக்கும் சிவசாமி கூறுகையில், ''வீடுகளில் களிமண் சிலைகளை வாங்கி வழிபடுவதே சிறப்பு. பாரம்பரிய பழக்க, வழக்கங்களை பின்பற்றும் குடும்பத்தினர், மண் சிலைகளை வைத்தே வழிபடுகின்றனர்.விதை விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு அதிகமாகிவிட்டதால், இந்தாண்டு அதிக சிலைகளை தயாரித்து கொடுத்துள்ளோம். சிலைகள், 50, 100 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X