பொது செய்தி

தமிழ்நாடு

சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தது

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம், செப்., 1 முதல், ஐந்தில் இருந்து பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 285 ரூபாயில் இருந்து, 320 ரூபாயாகவும், லாரி, பஸ் உட்பட கனரக வாகனங்களுக்கு 480 ரூபாயில் இருந்து, 515 ரூபாயாகவும், கார், ஜீப், வேன் உள்ளிட்டவற்றுக்கு 10 முதல், 15 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட லாரி

திருப்பூர்:தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம், செப்., 1 முதல், ஐந்தில் இருந்து பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 285 ரூபாயில் இருந்து, 320 ரூபாயாகவும், லாரி, பஸ் உட்பட கனரக வாகனங்களுக்கு 480 ரூபாயில் இருந்து, 515 ரூபாயாகவும், கார், ஜீப், வேன் உள்ளிட்டவற்றுக்கு 10 முதல், 15 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சம்மேளனத்தலைவர் சின்னச்சாமி கூறுகையில், 'தொற்று காரணமாக லாரி தொழில் நசிவடைந்துள்ள நிலையில், டீசல் விலை குறைக்கப்படாததால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். டீசல் விலை லிட்டர், 68 ரூபாய் இருந்தபோது லாரி வாடகை உயர்த்தப்பட்டது. தற்போது டீசல் விலை, 95 ரூபாயை எட்டிய போதும், வாடகையை உயர்த்தாமல் தொழில் செய்து வருகிறோம். டீசல் விலை குறையாத நிலையில், சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்றுவதே, இதற்கு தீர்வு'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X