பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிடுங்கள்; வெற்றி பெறுங்கள்! தொழில்முனைவோருக்கு அறிவுரை

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில், ஏற்றுமதி, இறக்குமதி குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நேற்று நடந்தது. பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் துவக்கிவைத்தார்.பயிற்சியாளர் நவீன் மாணிக்கம் பேசியதாவது:ஏற்றுமதி வர்த்தகம், நாட்டுக்கு அன்னிய செலாவணி ஈட்டித்தருகிறது. மத்திய அரசு, ஏற்றுமதியாளர்களுக்கு ஏராளமான

திருப்பூர்;திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில், ஏற்றுமதி, இறக்குமதி குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நேற்று நடந்தது. பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் துவக்கிவைத்தார்.பயிற்சியாளர் நவீன் மாணிக்கம் பேசியதாவது:ஏற்றுமதி வர்த்தகம், நாட்டுக்கு அன்னிய செலாவணி ஈட்டித்தருகிறது. மத்திய அரசு, ஏற்றுமதியாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி, ஊக்கப்படுத்துகிறது. புதிய ஏற்றுமதியாளர்கள், அரசு சலுகை விவரங்களை அறிந்து, அவற்றை பயன்படுத்த வேண்டும். உலகளாவிய சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொண்டு, பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு, அரசு சலுகைகள் கைகொடுக்கும்.சர்வதேச அளவில் அதிகம் தேவைப்படும் பொருட்கள் எவை, குறிப்பிட்ட பொருளுக்கான போட்டி நிலை எப்படி உள்ளது; எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் மானியம் என்பதை அறிந்து, பொருட்கள் ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும். திட்டமிடுதல், ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ச்சி நிலையை அடைவதற்கு கைகொடுக்கும். மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி, ஒரு நிறுவனத்துக்கு சிறந்த லாபத்தை ஈட்டித்தரும்; சந்தையில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்.டாலர், யூரோ போன்ற அன்னிய பண மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அன்னிய பண மதிப்பு குறைந்தால், பொருட்கள் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் தொகை குறையும்; அதேநேரம், இறக்குமதி பொருட்கள் விலை சற்று குறையும். அன்னிய பண மதிப்பு உயர்ந்தால், ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமானதாகவும், இறக்குமதியாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.தேவையான பொருட்களை இருப்பிடத்தில் இருந்தவாறே, வாங்குவதில் நுகர்வோர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் வளர்ச்சி அடைந்துவருகிறது. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும், ஏராளமான டிஜிட்டல் வர்த்தக தளங்கள் இயங்குகின்றன. அவற்றை பயன்படுத்தி, உற்பத்தி பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தலாம். இவ்வாறு, அவர் பேசினார்.புதிய தொழில்முனைவோர் பங்கேற்று, ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X