பொது செய்தி

தமிழ்நாடு

சுமைப்பணியாளர் கூலி; பேச்சுவார்த்தை துவக்கம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், பி.என்., ரோடு பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. இவை, பின்னலாடை நிறுவனங்கள் வழங்கும் ஆர்டர் அடிப்படையில், ஆயத்த ஆடைகளை லாரிகளில் ஏற்றி, வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கின்றன.லாரிகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற சுமைப்பணிகளில், ஏராளமான தொழிலாளர் பணிபுரிகின்றனர். தொழிற்சங்கங்களும், சரக்கு போக்குவரத்து

திருப்பூர்:திருப்பூர், பி.என்., ரோடு பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. இவை, பின்னலாடை நிறுவனங்கள் வழங்கும் ஆர்டர் அடிப்படையில், ஆயத்த ஆடைகளை லாரிகளில் ஏற்றி, வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கின்றன.லாரிகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற சுமைப்பணிகளில், ஏராளமான தொழிலாளர் பணிபுரிகின்றனர். தொழிற்சங்கங்களும், சரக்கு போக்குவரத்து சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமை பணியாளர்களுக்கு கூலி உயர்வை நிர்ணயிக்கின்றன.கூலி உயர்வு ஒப்பந்தம், 2020ல் காலாவதியானது. தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து, புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று துவங்கியது. திருப்பூர் ராம்நகர் மூன்றாவது வீதியில் உள்ள பி.சி.சி., டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.செயலாளர் சோமசுந்தரம்; தொழிற்சங்கம் தரப்பில், சி.ஐ.டி.யு., ராஜகோபால், மணி, ஏ.ஐ.டி.யு.சி., சேகர், ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்கம் கண்ணப்பன், கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.ஐம்பது சதவீதம் கூலி உயர்வு வழங்க தொழிற்சங்கத்தினர் கோரினர். ஆனால், 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க முன்வந்தனர். தொழிற்சங்கத்தினர் இதை ஏற்கவில்லை.வரும் 7ம் தேதி மீண்டும் பேச்சு நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X