பொது செய்தி

தமிழ்நாடு

2 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள் ரயில்களில் எப்போதும் பயணிக்கலாம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை-கொரோனா தடுப்பூசி 2 'டோஸ்' போட்ட அனைத்து வகை பயணியரும், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - திருமால்பூர், சென்ட்ரல் - அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி உட்பட ஐந்து வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 2 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள்  ரயில்களில் எப்போதும் பயணிக்கலாம்

சென்னை-கொரோனா தடுப்பூசி 2 'டோஸ்' போட்ட அனைத்து வகை பயணியரும், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - திருமால்பூர், சென்ட்ரல் - அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி உட்பட ஐந்து வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் வருகை அதிகம் உள்ள, காலை 7:00 மணியில் இருந்து 9:30 மணி வரையும், மாலை 4:30 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரையும், பொது ஆண் பயணியர் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல், இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.தடுப்பூசி 2 டோஸ் போட்டவர்கள், அதற்கான சான்றிதழை காட்டி, பயணச்சீட்டு பெற்று, ரயில்களில் எல்லா நேரங்களிலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளதாவது:பொது ஆண் பயணியர் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழை, நிலைய டிக்கெட் கவுன்டரில் காட்டினால், அனைத்து நேரத்திலும், டிக்கெட் வாங்கி, பயணம் செய்யலாம். ரிட்டர்ன் டிக்கெட், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கியும் பயணிக்கலாம். ஆண் பயணியரில், மாணவர்களை தவிர்த்து மற்றவர்கள், பணியிடத்தில் இருந்து அங்கீகார அட்டை மற்றும் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள், காலை, மாலை வேளைகளில் ரயில்களில் பயணிக்க கட்டுப்பாடு தொடரும். ரிட்டர்ன் டிக்கெட், மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படாது. பயணியர், முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X