கல்லுாரிகளிலேயே மாணவருக்கு தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளிலேயே மாணவருக்கு தடுப்பூசி

Added : செப் 03, 2021
Share
திருப்பூர்:சிக்கண்ணா மற்றும் குமரன் மகளிர் கலை கல்லுாரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த முகாமிற்கு நாட்டு நலப்பணித்திட்டம் அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், மாநகர் நல அலுவலர்
 கல்லுாரிகளிலேயே மாணவருக்கு தடுப்பூசி

திருப்பூர்:சிக்கண்ணா மற்றும் குமரன் மகளிர் கலை கல்லுாரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த முகாமிற்கு நாட்டு நலப்பணித்திட்டம் அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், மாநகர் நல அலுவலர் பிரதீப் ஆகியோர் துவக்கி வைத்தனர். 360 மாணவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.திருப்பூர் குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவியருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இதில், 200 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.மாநகர நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார், கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்ஸி பிலிப், கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X