பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு! சராசரியை தாண்டும் பருவ மழை

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை, சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பதிவாகுமென, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழையளவு, 618.20 மி.மீ., என்று கணக்கிப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், 612.04 மி.மீ., அளவுக்கு சராசரியாக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச அளவாக, 2015ல், 865 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவத்தில், மாவட்டத்தின்

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை, சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பதிவாகுமென, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழையளவு, 618.20 மி.மீ., என்று கணக்கிப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், 612.04 மி.மீ., அளவுக்கு சராசரியாக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச அளவாக, 2015ல், 865 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவத்தில், மாவட்டத்தின் சராசரி மழை அளவுக்கு மட்டுமே மழை பெய்தது. ஜூன் முதல் செப்., வரையிலான தென்மேற்கு பருவத்தில், 154.80 மி.மீ., என்பது சராசரி அளவாக நிர்ணயத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு பிறகு, இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பதிவாகியுள்ளது.அட்டவணைஜூன் மாதம், 22 மி.மீ., சராசரியாக பெய்ய வேண்டியது, இந்தாண்டு 28.04 மி.மீ., பதிவாகியுள்ளது. ஜூலையில், 27.10 மி.மீ., சராசரி, இந்தாண்டு, 36.35 மி.மீ., அளவுக்கு பதிவாகியுள்ளது. ஆக., மாதம், 31.70 மி.மீ., பெய்ய வேண்டியது, 33.99 மி.மீ., பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவத்தில், 154.80 மீ.மீ, என்பது சராசரி மழை அளவு; நேற்று காலை வரை, 104.37 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கனமழைஜன., - 11 நாட்கள், பிப்., - 2 நாட்கள் என, குளிர் பருவத்தில், 13 நாட்கள் மழை பெய்துள்ளது. கோடையில், ஏப்., மாதம் மூன்று நாட்களும், மே மாதம் எட்டு நாட்களும் மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவத்தில், ஜூன் மாதம் நான்கு நாட்கள்; ஜூலையில், மூன்று நாட்கள்; ஆக., மாதம், நான்கு நாட்கள் என, 11 நாட்கள் கனமழை பெய்துள்ளது. செப்., மாதம் துவங்கிய முதல் நாளிலேயே, கன மழை பெய்துள்ளது.மழை அளவிடும் பகுதியில் மழை இல்லை; மற்ற பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் கணக்கிட இயலவில்லை. வருவாய்த்துறை, ஊத்துக்குளியில், 18 மி.மீ., - திருப்பூர் வடக்கில், 4 மி.மீ., என பதிவு செய்துள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:தென்மேற்கு பருவத்தில், செப்., மாதத்தில் அதிகபட்ச மழை பெய்வது வழக்கம். இம்மாதம் மட்டும், 74 மி.மீ., பெய்ய வேண்டும்; முதல் நாளிலேயே, 5.99 மி.மீ., பதிவாகியுள்ளது. கடந்த, 15 ஆண்டுகளில் அதிகபட்சமாக, 2017ல் மட்டும், தென்மேற்கு பருவமழை 365 மி.மீ., பதிவாகியுள்ளது.வடகிழக்கு பருவம், விவசாய பணிக்கு உதவியாக இருக்கும். தென்மேற்கு பருவம், மாவட்டத்தின் நிலத்தடி நீர் இருப்பை செறிவூட்டுவதாக இருக்கும். இந்தாண்டில், சராசரி அளவை தாண்டி மழை பதிவாகுமென, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X