சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்கள் 200 பேர் மீது வழக்கு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கீழ்ப்பாக்கம்--பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ௨00 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னையில், அரசு உத்தரவின் அடிப்படையில், நேற்று முன்தினம் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே கல்லுாரி மாணவர்கள் தங்களது அட்டகாசத்தை பொது இடங்களிலும், அரசு பஸ்களிலும் துவக்கினர்.அந்தவகையில், நேற்று பச்சையப்பன் கல்லுாரி, கும்மிடிப்பூண்டி

கீழ்ப்பாக்கம்--பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ௨00 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னையில், அரசு உத்தரவின் அடிப்படையில், நேற்று முன்தினம் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே கல்லுாரி மாணவர்கள் தங்களது அட்டகாசத்தை பொது இடங்களிலும், அரசு பஸ்களிலும் துவக்கினர்.அந்தவகையில், நேற்று பச்சையப்பன் கல்லுாரி, கும்மிடிப்பூண்டி 'ரூட்' மாணவர்கள் டெய்லர்ஸ் சாலை சிக்னலில் இருந்து கோஷம் போட்டபடி கல்லுாரிக்குச் சென்றனர்.அதேபோல், ஆவடி ரூட் மாணவர்கள் டெய்லர்ஸ் சாலையில் ஊர்வலமாக கல்லுாரிக்குச் சென்றனர்.இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில், சட்ட விரோதமாக ஒன்று கூடியது, ஊர்வலமாகச் சென்றது, அரசு உத்தரவை மீறியது என மூன்று பிரிவு களின் கீழ், ௨00 மாணவர்கள் மீது, கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X