சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் மரணத்தில் சந்தேகம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், மங்கலம், இச்சிப்பட்டி, சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் குமாரசாமி, 90. கடந்த 31ம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே துாங்கி கொண்டிருந்தார்.திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டது; அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இறப்புக்கு முன்னதாக, அவரிடம்

திருப்பூர்:திருப்பூர், மங்கலம், இச்சிப்பட்டி, சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் குமாரசாமி, 90. கடந்த 31ம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே துாங்கி கொண்டிருந்தார்.திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டது; அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இறப்புக்கு முன்னதாக, அவரிடம் கோவை ஜே.எம்-2 மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா மரண வாக்குமூலம் பெற்றார். மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில், ''துாங்கி கொண்டிருந்த போது தன் மீது, யாரோ மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாகவும், யார் அதை செய்தது என தெரியவில்லை என்று, குமாரசாமி, இறப்பதற்கு முன்பு கூறியுள்ளார்.குமாரசாமியின் வீடு அருகே, அவரது மகன் மாரப்பன், 55 வசித்து வருகிறார். மாரப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்; குமாரசாமி மீது தீ வைத்தது யார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X