சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவிற்கு கடத்த இருந்த அரிசி பறிமுதல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
பழவேற்காடு--ஆந்திர மாநிலத்திற்கு படகில் கடத்த இருந்த 9 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, கடலோர காவல் படையினர் பிடித்து, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.தமிழக ரேஷன் அரிசி, பழவேற்காடு பகுதியில் இருந்து படகுகள் மூலம் ஆந்திராவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கடலோர காவல் படையினர் முகத்துவாரம் அருகே படகில் ரோந்து பணியில்

பழவேற்காடு--ஆந்திர மாநிலத்திற்கு படகில் கடத்த இருந்த 9 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, கடலோர காவல் படையினர் பிடித்து, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.தமிழக ரேஷன் அரிசி, பழவேற்காடு பகுதியில் இருந்து படகுகள் மூலம் ஆந்திராவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கடலோர காவல் படையினர் முகத்துவாரம் அருகே படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சாட்டன்குப்பம் பகுதியில் இருந்து, ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற, இரண்டு நாட்டு படகுகளை மடக்கி சோதனை செய்தனர்.அதில், 9 டன் எடை உடைய 179 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளும், 50 கிலோ துவரம் பருப்பும் இருந்தன. ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது.இரண்டு படகுகள் மற்றும் அரிசி மூட்டைகளை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நெல்லுார் ஜில்லா, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, 53, ராஜ்குமார், 20, ஆகியோரை பிடித்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X