சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:தஞ்சையை சேர்ந்த சண்முகம் மகன் முருகானந்தம், 27. அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த வித்யா, 26, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசித்து வந்தனர். தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2013 நவ., 27ல், மனைவி, மகளை விட்டு விட்டு, கணவர் தன் ஊருக்கு செல்ல முடிவு

திருப்பூர்:தஞ்சையை சேர்ந்த சண்முகம் மகன் முருகானந்தம், 27. அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த வித்யா, 26, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசித்து வந்தனர். தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2013 நவ., 27ல், மனைவி, மகளை விட்டு விட்டு, கணவர் தன் ஊருக்கு செல்ல முடிவு செய்ததால், மனமுடைந்த வித்யா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகானந்தத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு அரசு வக்கீல் பாண்டியன் வாதாடினார்.வழக்கில், நேற்று மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். அதில், மனைவியை தற்கொலைக்கு துாண்டிய முருகானந்தத்திற்கு, 10 ஆண்டு சிறை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X