பொது செய்தி

தமிழ்நாடு

கொசஸ்தலையில் மீண்டும் வெள்ளப் பெருக்கு

Added : செப் 03, 2021
Share
Advertisement
பள்ளிப்பட்டு--கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெடியம் தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து வருகிறது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கார்வேட்நகரம் வட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அம்மபள்ளி அணை. இந்த அணையின் உபரி நீர், பள்ளிப்பட்டு
 கொசஸ்தலையில் மீண்டும் வெள்ளப் பெருக்கு

பள்ளிப்பட்டு--கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெடியம் தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து வருகிறது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கார்வேட்நகரம் வட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அம்மபள்ளி அணை. இந்த அணையின் உபரி நீர், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றுக்கு வந்து சேர்கிறது.கடந்த வாரம் அணை திறக்கப்பட்டதால், கொசஸ்தலையில், இரண்டு நாட்களுக்கு வெள்ளப்பெருக்கு நீடித்தது. நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்ததால், இரவு 8:30 மணிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நெடியம் தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது. கொசஸ்தலை ஆறு, பூண்டி நீர்த்தேக்கத்தில் கலப்பதால், பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X