பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிய உணவு கிடைக்குமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிய உணவு கிடைக்குமா?

Added : செப் 03, 2021
Share
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. நோய் பரவலை தடுக்கும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.வகுப்பறைகள் சுத்தம்

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. நோய் பரவலை தடுக்கும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு வகுப்பறையில், 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, தனி பதிவேட்டில் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு வருகிறது

.ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அவர்களே உணவு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உணவு கொண்டு வர முடியாத ஒரு சில மாணவர்கள், மதிய நேரத்தில், பள்ளிக்கு வெளியே உணவகங்களில் சாப்பிடுகின்றனர். சிலர் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் சென்று உணவு உண்பதாலும், சக மாணவர்களுடன் உணவை பகிர்ந்து கொள்வதும், நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என, பெற்றோர் அச்சப்படுகின்றனர். இந்த பேரிடர் காலத்தில் மட்டுமாவது, சத்துணவு திட்டத்தின்கீழ், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு சாப்பாடு வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- -நமது நிருபர்- -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X