பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு இல்லாத 100 நாள் தொழிலாளர்கள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
வயலுார்-வயலுார் ஊராட்சியில் அங்கன்வாடி அருகே, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சமூக விலகல் இல்லாமல், முக கசவம் அணியாமல் இருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், வயலுார் சமுதாயக்கூடம் அருகே குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம், நான்கு ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலால் இரு ஆண்டுகளாக பூட்டியே கிடந்த

வயலுார்-வயலுார் ஊராட்சியில் அங்கன்வாடி அருகே, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சமூக விலகல் இல்லாமல், முக கசவம் அணியாமல் இருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், வயலுார் சமுதாயக்கூடம் அருகே குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம், நான்கு ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலால் இரு ஆண்டுகளாக பூட்டியே கிடந்த அங்கன்வாடி மையம், தற்போது திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கு, 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகின்றனர்.இந்த மையத்தின் முன்புற தரைகள் பெயர்ந்து உள்ளதால், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என, சுகாதார அமைப்பினர் எச்சரித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று, அங்கன்வாடி மையத்தைச் சுற்றி வளர்ந்துள்ள முட்செடிகளை, 100 நாள் திட்ட பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் முக கவசம் அணியாமல், சமூக விலகல் கடைபிடிக்காமல் பணியில் ஈடுபட்டதை பார்த்து, குழந்தைகளை பள்ளியில் விடவும், அழைத்து செல்லவும் வந்த பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X