பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி கல்லுாரியில் 191 மாணவர்கள் சேர்ப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருத்தணி-அரசு கலைக் கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வில், 686 இடங்களில், 191 மாணவ - மாணவியர் மட்டுமே சேர்ந்து உள்ளனர்.திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை முதலாண்டில் சேர மொத்தம், 2,331 மாணவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்திருந்தனர்.பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., - பி.பி.ஏ., மற்றும் பி.காம்., - சி.எஸ்., போன்ற துறைகளில் மொத்தம், 686 மாணவர்கள் சேர்க்கப்பட

திருத்தணி-அரசு கலைக் கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வில், 686 இடங்களில், 191 மாணவ - மாணவியர் மட்டுமே சேர்ந்து உள்ளனர்.திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை முதலாண்டில் சேர மொத்தம், 2,331 மாணவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்திருந்தனர்.பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., - பி.பி.ஏ., மற்றும் பி.காம்., - சி.எஸ்., போன்ற துறைகளில் மொத்தம், 686 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம், 26 துவங்கி நேற்று வரை நடந்தது. இதில், கட் ஆப், 300 மதிப்பெண்கள் மேல் எடுத்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில் 191 மாணவர்கள் மட்டுமே கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்.திருத்தணி அரசு கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி கூறியதாவது:முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இன சுழற்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில், 191 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு வரும், 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இதில், 'கட் ஆப்' 251 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் பங்கேற்கலாம். இதிலும் காலியிடங்கள் இருந்தால், மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X