சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
பொன்னேரி-'ஆன்லைன்' வகுப்புகள் சரியாக நடத்தாமல், தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர், பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆசிரியர் பட்டய பயிற்சி கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு மையம் அமைக்கப்பட்டது. நேற்று, தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்கள், தேர்வுகளை

பொன்னேரி-'ஆன்லைன்' வகுப்புகள் சரியாக நடத்தாமல், தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர், பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆசிரியர் பட்டய பயிற்சி கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு மையம் அமைக்கப்பட்டது. நேற்று, தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்கள், தேர்வுகளை புறக்கணித்துவிட்டு, நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், 'ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு, திடீரென நேரடியாக தேர்வுகளை எழுத வேண்டும் என்கின்றனர். எங்களால் எப்படி எழுத முடியும்' என்றனர்.மேலும், 'நேரடி வகுப்புகள் நடத்தி, அதன் பின் தேர்வுகள் நடத்தவேண்டும்' என அவர்கள் தெரிவித்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிடுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X