பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
உளவியல் ரீதியாக அணுகணும்கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள்

உளவியல் ரீதியாக அணுகணும்கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணவியர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கொரோனா மீதான அச்சத்தை போக்கி, நோய் பரவல் விழிப்புணர்வு ஏற்படுத்த, மருத்துவ மற்றும் உளவியல் ரீதியாக மாணவியரை அணுகுவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மாணவியருக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.மாணவர்களுக்கு உதவி தொகைதிருவள்ளூர்: மத்திய அரசின் தொழில்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள், கல்வி உதவி தொகை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், மாணவ - மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.தகுதி வாய்ந்தோர், திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அ லுவலரிடமோ, tngovtiitscholarship@gmail.com என்ற இ - மெயிலிலோ விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திறன் பயன்பாட்டு பயிற்சிதிருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில், பழங்குடியினர் இனத்தில் படித்த இளைஞர்களுக்கு திறன் பயன்பாட்டு பயிற்சி மூலம், சமையல் கலை, ஓட்டுனர் பயிற்சி, தையல் பயிற்சி, மருத்துவ பரிசோதனை, செவிலியர் பயிற்சி, எலக்ட்ரீசியன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள விரும்புவோர், ஜாதி சான்று, ஆதார் நகல், கல்வி சான்றுடன், வரும் 10ம் தேதிக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.ஊட்டச்சத்து மாத விழா துவக்கம்வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டாரக்கல்வி அலுவலகம் அருகே, வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று, ஊட்டச்சத்து மாத விழா உறுதிமொழி எடுக்கப்பட்டது.

வட்டார மகளிர் குழு கூட்டமைப்பினர், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர், வட்டார கல்வி அலுவலகத்தினர் உள்ளிட்ட பல நிலை அலுவலர்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் மற்றும் நன்மை குறித்து உறுதிமொழி ஏற்றனர்.கோவிலில் வசூல் ரூ.4.37 லட்சம்திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் மலையடிவார நுழைவிட பகுதியில், இரு உண்டியல்கள் உள்ளன. இவற்றில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இவை நிரம்பிய நிலையில், நேற்று முன்தினம் ஆய்வாளர்கள் சிவகாமி, பாஸ்கர், செயல் அலுவலர் குமரன் மேற்பார்வையில் உண்டியல் திறந்து காணிக்கை தொகை கணக்கிடப்பட்டது. 4.37 லட்சம் ரூபாய் இருந்தது.கோவில் உண்டியலில் மனுதிருப்போரூர்: கொரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலைகளை நிறுவவும், விழா கொண்டாடவும் அனுமதி இல்லை என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தடை அகல வேண்டும் என, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில், ஹிந்து முன்னணி கட்சியினர் நேற்று மனு போட்டனர். முன்னதாக, கோவில் கிழக்குப்புற 16 கால் மண்டபம் அருகே, விழா தடை நீக்க கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X