பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை வழக்கில் தீர்வு காண வரும் 9 வரை பிரீ-லோக் அதாலத்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:நிலுவை வழக்கில் தீர்வு காண, பிரீ- லோக் அதாலத் விசாரணை, கோவையில் வரும் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.நீதிமன்றங்களில் நீண்டகாலம் நிலுவையிலுள்ள, வழக்கில் தீர்வு காண்பதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, தேசிய லோக் அதாலத் விசாரணை நடத்தப்படுகிறது. இரு தரப்பினர் சம்மதம் அடிப்படையில், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. வரும் 1ல், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய

கோவை:நிலுவை வழக்கில் தீர்வு காண, பிரீ- லோக் அதாலத் விசாரணை, கோவையில் வரும் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.நீதிமன்றங்களில் நீண்டகாலம் நிலுவையிலுள்ள, வழக்கில் தீர்வு காண்பதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, தேசிய லோக் அதாலத் விசாரணை நடத்தப்படுகிறது. இரு தரப்பினர் சம்மதம் அடிப்படையில், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. வரும் 1ல், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய லோக் அதாலத் நடக்கிறது.இதில், காசோலை மோசடி, குடும்ப நல வழக்கு, கிரிமினல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, தொழிலாளர் நலன் வழக்கு, நுகர்வோர் கோர்ட் வழக்கு, வங்கி கடன் நிலுவை மற்றும் சிவில் வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.தேசிய லோக் அதாலத் நடத்தப்படுவதற்கு முன், பிரீ-லோக் அதாலத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், நேற்று துவங்கியது. வரும் 9ம் தேதி வரை நடைபெறும் லோக் அதாலத்தில், நிலுவை வழக்கை முடித்துக் கொள்ள விரும்புவோர் ஆஜராகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X