பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி துவக்கம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கு வளாகத்தில், நான்கு மாதங்களுக்கு பின் நீச்சல் பயிற்சி மீண்டும் துவக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கு வளாகத்தில், அரசு நீச்சல் குளம் அமைந்துள்ளது. இதில் பள்ளி மாணவ - மாணவியருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.கோடை காலத்தில் இதற்காக நடத்தப்படும் சிறப்பு பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்கள், அதற்கான

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கு வளாகத்தில், நான்கு மாதங்களுக்கு பின் நீச்சல் பயிற்சி மீண்டும் துவக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கு வளாகத்தில், அரசு நீச்சல் குளம் அமைந்துள்ளது. இதில் பள்ளி மாணவ - மாணவியருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.கோடை காலத்தில் இதற்காக நடத்தப்படும் சிறப்பு பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்கள், அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தவிர பொதுமக்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வழிகாட்டி நெறிமுறைகளுடன் நீச்சல் குளம் செயல்படலாம் என, அரசு அறிவித்துள்ளது. இரு தினங்களாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை அலுவலர் ரமேஷ் கூறியதாவது:கொரோனாவுக்கு முன் மாவட்ட விளையாட்டு அரங்கு வளாகத்தில் பல்வேறு பயற்சிகள், போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. தொற்று காரணமாக போட்டிகள் நிறுத்தப்பட்டன.தற்போது அரசு வழிகாட்டி நெறிமுறைகளுடன் நீச்சல் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. காலை, மாலையில் மட்டும் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X