பொது செய்தி

தமிழ்நாடு

மர வேர்கள் அரவணைப்பில் சிவன் கோவில்

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்,-வேர்களுக்கிடையே குகைபோல் சிதிலமடைந்துள்ள சிவன் கோவிலை புதுப்பித்துகட்ட வேண்டும் என,ஆரனேரி கிராம மக்கள்எதிர் பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சி ஆரனேரி கிராமத்தில் பழமையான அர்த்தநாதீஸ்வரர்கோவில் உள்ளது. 400 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த கோவில், பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.கோபுரத்தின் மேல் அரசு, வேம்பு, நுனா

ஸ்ரீபெரும்புதுார்,-வேர்களுக்கிடையே குகைபோல் சிதிலமடைந்துள்ள சிவன் கோவிலை புதுப்பித்துகட்ட வேண்டும் என,ஆரனேரி கிராம மக்கள்எதிர் பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சி ஆரனேரி கிராமத்தில் பழமையான அர்த்தநாதீஸ்வரர்கோவில் உள்ளது. 400 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த கோவில், பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.கோபுரத்தின் மேல் அரசு, வேம்பு, நுனா மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களின் வேர்களுக்கிடையே கோவிலின் முன்பகுதி குகைபோல் காட்சியளிக்கிறது. கோவிலின் வெளியே சிறிய நந்தி உள்ளது.ஆரனேரி மக்கள் கூறியதாவது:பராமரிப்பு இல்லாத இந்த கோவிலை, சிவனடியார்கள் சிலர் பூஜைசெய்து வருகின்றனர். கோவிலை சுற்றி ஏராளமான கல் துாண்கள் சிதறி கிடக்கின்றன. இந்த துாண்கள் உள்ள கல்வெட்டுகளில் கோவில் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்து, கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். நாகதோஷம், மன குழப்பம் உள்ளவர்கள் இந்த கோவிலில் வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X