பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா திறந்தும் பயனில்லை

Added : செப் 03, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்,-திருப்புலிவனம் 'அம்மா' பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், அதை பயன்படுத்த முடியாததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் ஊராட்சியில், 2018ல், 30 லட்சம் ரூபாய் செலவில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது.குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், நடைபயிற்சிக்கான பாதை, இளைஞர்களுக்கான உடற்பயிற்சி

உத்திரமேரூர்,-திருப்புலிவனம் 'அம்மா' பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், அதை பயன்படுத்த முடியாததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் ஊராட்சியில், 2018ல், 30 லட்சம் ரூபாய் செலவில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது.குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், நடைபயிற்சிக்கான பாதை, இளைஞர்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள், இருபாலருக்கான தனித்தனி கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. தளர்வுக்கு பின் திறக்கப்பட்டும், பூங்கா பராமரிக்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:பூங்காவில் நடைபயிற்சிக்கான பாதையில் புல் மற்றும் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் பூனை காஞ்சான் செடிகள் முளைத்துள்ளன. இருக்கையில் விரிசல் ஏற்பட்டும், இருக்கையை சுற்றிலும் புதர் மண்டியுள்ளன.குழந்தைகளுக்கான திடலில் ஊஞ்சல் விளையாட்டு உபகரணத்தில் சங்கிலியில் தொங்கும் இருக்கை மாயமாகியுள்ளது. ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தில் மின்கம்பி செல்லும் குழாய் உடைந்து தொங்குகிறது.பூங்கா திறந்தும், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காதால், 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா சீரழிந்து வருகிறது. எனவே, பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X