செய்திகள் சில வரிகளில்///| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்///

Added : செப் 03, 2021
Share
சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கோப்பைவிருதுநகர்: கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக மாதாந்திர வருவாய் நிர்வாக பணித்திறன் ஆய்வு கூட்டம் நடந்தது. சான்றுகள் பெறுதல், கனிமவளங்களை திருடுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், ரேஷன் கடைகளில் தணிக்கை என 27 பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக முதல் பரிசை சாத்துார் தாசில்தார் வெங்கடேஷ், இரண்டாம் பரிசை சிவகாசி தாசில்தார்

சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கோப்பை

விருதுநகர்: கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக மாதாந்திர வருவாய் நிர்வாக பணித்திறன் ஆய்வு கூட்டம் நடந்தது. சான்றுகள் பெறுதல், கனிமவளங்களை திருடுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், ரேஷன் கடைகளில் தணிக்கை என 27 பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக முதல் பரிசை சாத்துார் தாசில்தார் வெங்கடேஷ், இரண்டாம் பரிசை சிவகாசி தாசில்தார் ராஜ்குமார், மூன்றாம் பரிசை வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் க்கு சுழல் கோப்பையாக கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன் பங்கேற்றார்.

குடியிருப்பு நிர்வாகிகள் பதவியேற்பு

விருதுநகர்: லட்சுமிநகர், பெத்தனாட்சி நகர், மீனாட்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக முனியாண்டி, செயலாளராக பொன்னுச்சாமி, பொருளாளராக மாரியப்பன், துணைத்தலைவராக லட்சுமணன், இணை செயலாளராக உதயக்குமார், துணை செயலாளராக காதர் பொறுப்பேற்றனர். சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ராஜீவ்காந்தி குடிநீர் திட்ட செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஊராட்சி துணை த்தலைவர் ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் சாந்தி, மகேந்திரன், கீதா பங்கேற்றனர்.

திறன் வளர்ப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி: மாவட்டத்தில் நகர்ப்பற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2021--22ம் ஆண்டிற்கு மாவட்டத்தில் பயிற்சிகள் நடத்துவதற்கு உரிய திறன் வளர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரிக்கு செப். 6 மாலை 4:00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என்றார்.

கொரோனாவில் இறந்தவர்களுக்கு உதவி

விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர்(சமுக பாதுகாப்பு திட்டம்) ஹேமலதா: விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்களில், கொரோனா இரண்டாம் அலையின் போது கொரோனா காரணமாக இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு, வாழ்வாதாரம் கருதி சிறப்பு நிதியுதவிகளை வழங்குவதற்கு கட்டமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரேனாவால் இறந்த பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் விவரங்களை உரிய ஆவணங்களுடன் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் சமுக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், என்றார்.

மீன் பிடி குத்தகைக்கு அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி: வெம்பக்கோட்டை, குல்லுார்சந்தை அணைகளின் மீன்பிடி உரிமைகளை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகை விடுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான விவரங்களை www.tenders.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X