பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி அத்தி வரதர் அவமதிப்பு கடையை நொறுக்கி ஆர்ப்பாட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-சுவாமி படத்திற்கு செருப்பு வைத்த கடைக்காரரால், காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுவாமியை அவமதித்ததாக, கடைக்காரர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வெளியில், ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்-சுவாமி படத்திற்கு செருப்பு வைத்த கடைக்காரரால், காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுவாமியை அவமதித்ததாக, கடைக்காரர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வெளியில், ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, கோவில் அருகில் சுவாமி அர்ச்சனைக்காக தேங்காய் பழக்கடை வைத்திருக்கும் பூபதி, 55, என்பவர், கடை வெளியில் ஒரு கட்டையில் செருப்பு மாட்டி, அதில் காஞ்சி அத்தி வரதர் புகைப்படம், பூ வைத்திருந்தார்.இதை பார்த்த ஆர்ப்பாட்டகாரர்கள் கடைக்காரரிடம், 'செருப்பில் சுவாமி படத்தை ஏன் வைத்துள்ளீர்கள்' என கேட்டனர். அதற்கு அவர், 'என் கடை. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் தி.க., காரன்' என கூறினார். இருதரப்புக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவும், ஆர்ப்பாட்டகாரர்கள் கடையை அடித்து நொறுக்கினர்.பாதுகாப்பிற்கு வந்த போலீசார், சண்டையை தடுத்தி நிறுத்தி, கடை உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.ஹிந்து முன்னணியினர் கூறியதாவது:விநாயகர் கோவில் அருகில் தேங்காய் கடை வியாபாரம் செய்து வரும் இடம் நகராட்சிக்கு சொந்த மானது. அந்த இடத்தை ஆக்கிரமித்து, அவர் கடை வைத்துள்ளார்.அவரது செயல், ஹிந்து மக்கள் அனைவரையும் புண்பட செய்துள்ளது. அந்த கடையை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, சில ஆண்டுகளுக்கு முன், நகராட்சியிடம் புகார் மனு கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த சம்பவம் நடப்பதற்கு முன், தி.க.,வைச் சேர்ந்த சிலர், தேங்காய் கடைக்கு சென்றதாகவும், அவர்களின் துாண்டுதலால் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X