பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா இந்து கூட்டமைப்பு மனு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவை, அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றி கடைபிடித்து மூன்று நாட்கள் கொண்டாட, அனுமதி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.கோவையில் வரும் 10 முதல் 12ம் தேதி வரை, விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும் தொற்று பரவாமலும் கொண்டாட, தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்
 விநாயகர் சதுர்த்தி விழா  இந்து கூட்டமைப்பு மனு

கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவை, அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றி கடைபிடித்து மூன்று நாட்கள் கொண்டாட, அனுமதி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.கோவையில் வரும் 10 முதல் 12ம் தேதி வரை, விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும் தொற்று பரவாமலும் கொண்டாட, தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன் படி, விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஸ்ரீவிவேகானந்தர் பேரவை, பாரத்சேனா, சிவசேனா, இந்துமக்கள் கட்சி - அனுமன்சேனா ஆகிய அமைப்பு நிர்வாகிகள், நேற்று கலெக்டர் சமீரனை சந்தித்து மனு கொடுத்தனர்.அக்கூட்டமைப்பு நிர்வாகி ஜலேந்திரன் கூறுகையில், ''பாரம்பரியமாக தொன்று தொட்டு நடைபெற்று வரும் விழாவை, நிறுத்துவதன் வாயிலாக நம் கலாசாரமும், பண்பாடும் அழிந்து போகும். அதனால் விமரிசையாக நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. எளிமையான முறையில் நடத்த அனுமதியளியுங்கள். தொற்று பரவாமலும், எச்சரிக்கையாகவும், விழிப்போடும் விழாவை நடத்த அனுமதியளியுங்கள்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X