வழிப்பறி நபர் மீது குண்டாஸ் வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி நபர் மீது 'குண்டாஸ்' வழக்கு

Added : செப் 03, 2021
Share
கோவை:ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன். கடந்த சில தினங்களுக்கு முன், கோவை அரசு மருத்துவமனை முன், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர், கத்தியைக்காட்டி மிரட்டி, 2,000 ரூபாயை பறித்துக் கொண்டார்.பிரபாகரன் அளித்த புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, குனியமுத்துார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முஜிபூர் ரகுமான்
 வழிப்பறி நபர் மீது 'குண்டாஸ்' வழக்கு

கோவை:ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன். கடந்த சில தினங்களுக்கு முன், கோவை அரசு மருத்துவமனை முன், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர், கத்தியைக்காட்டி மிரட்டி, 2,000 ரூபாயை பறித்துக் கொண்டார்.பிரபாகரன் அளித்த புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, குனியமுத்துார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது தெரிந்தது.அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க, போலீசார் பரிந்துரை செய்தனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் முஜிபூர் ரகுமானை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து, கடிதம் சிறையில் உள்ள முஜிபூர் ரகுமானிடம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X