பொது செய்தி

தமிழ்நாடு

சதுர்த்தி கொண்டாட அனுமதி: விநாயகரிடம் பக்தர்கள் மனு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:விநாயகரிடம் மனு கொடுக்கும் போராட்டம், காந்திபுரம் சித்திவிநாயகர் கோவிலில் நேற்று நடந்தது.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு, விதிமுறைகளின் படி அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஹிந்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், காந்திபுரம் கிராஸ்கட் சாலையிலுள்ள சித்திவிநாயகர் கோவில் முன்பு, நேற்று ஹிந்து தலைவர்கள் கூட்டமைப்பினர் திரண்டனர்.அகில பாரத
 சதுர்த்தி கொண்டாட அனுமதி: விநாயகரிடம் பக்தர்கள் மனு

கோவை:விநாயகரிடம் மனு கொடுக்கும் போராட்டம், காந்திபுரம் சித்திவிநாயகர் கோவிலில் நேற்று நடந்தது.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு, விதிமுறைகளின் படி அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஹிந்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், காந்திபுரம் கிராஸ்கட் சாலையிலுள்ள சித்திவிநாயகர் கோவில் முன்பு, நேற்று ஹிந்து தலைவர்கள் கூட்டமைப்பினர் திரண்டனர்.அகில பாரத மக்கள் கட்சி மாநில தலைவர் ராமநாதன், ஹிந்து மக்கள் புரட்சி படை மாநில தலைவர் பீமா பாண்டி, சத்ரபதி சிவாஜி அறக்கட்டளை மாநில தலைவர் சரவணன், சஷ்டிசேனா ஹிந்து மக்கள் இயக்க மாநில தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர், உண்ணாவிரத போரட்டம் நடத்துவதற்காகவும், சித்தி விநாயகரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதற்கும் திரண்டனர்.முன்னதாக, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், 'போராட்டங்களுக்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்; அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள்' என்று எச்சரித்தனர்.இதையடுத்து, இருதரப்பிற்கும் பேச்சு நடந்தது. முடிவில், ஹிந்து தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், விநாயகரை வழிபாடு செய்து மனுவை சமர்ப்பித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X