பொது செய்தி

தமிழ்நாடு

உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்குமாறு டி.ஆர்.ஓ., உத்தரவு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:'விவசாயிகளுக்கு உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க வேண்டும்' என்று தாசில்தார்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.விவசாயிக்கு சொந்தமான நிலத்தின் பரப்பு, சாகுபடி செய்யப்படும் பயிர், கிராமத்தில் குறிப்பிட்ட நிலம் எங்குள்ளது என்ற விவரங்களை கொண்டுள்ள வருவாய்த்துறை ஆவணம், அடங்கல் எனப்படுகிறது. விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கும், பிற

கோவை:'விவசாயிகளுக்கு உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க வேண்டும்' என்று தாசில்தார்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.விவசாயிக்கு சொந்தமான நிலத்தின் பரப்பு, சாகுபடி செய்யப்படும் பயிர், கிராமத்தில் குறிப்பிட்ட நிலம் எங்குள்ளது என்ற விவரங்களை கொண்டுள்ள வருவாய்த்துறை ஆவணம், அடங்கல் எனப்படுகிறது. விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கும், பிற அரசு நல உதவிகள் பெறுவதற்கும் அடங்கல் சான்று அவசியம்.இந்த சான்று கோரி செல்லும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் இருந்துவருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில், 'அனைத்து கிராமங்களிலும், அடங்கல் சான்று கோரி வரும் விவசாயிகளுக்கு கால தாமதம் இன்றி உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குமாறு, சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X