சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொழுதுபோக்கு இணையதளத்தில் ஆபாச பேச்சு: எஸ்.பி.,யிடம் புகார்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:பொழுதுபோக்கு இணையதளங்களில், ஆபாச உரையாடல் நடத்தும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.பொள்ளாச்சியை சேர்ந்த இம்மானுவேல், தனவிக்ரம் ஆகியோர், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.மனுவில் கூறியுள்ளதாவது:கடந்த மூன்று மாதங்களுக்கு முன், 'கிளப் ஹவுஸ்' எனும் இணையதள பொழுது போக்கு செயலி

கோவை:பொழுதுபோக்கு இணையதளங்களில், ஆபாச உரையாடல் நடத்தும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.பொள்ளாச்சியை சேர்ந்த இம்மானுவேல், தனவிக்ரம் ஆகியோர், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.மனுவில் கூறியுள்ளதாவது:கடந்த மூன்று மாதங்களுக்கு முன், 'கிளப் ஹவுஸ்' எனும் இணையதள பொழுது போக்கு செயலி ஆரம்பிக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்து, ஆடியோ சாட் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளலாம்.அந்த செயலி மூலம், நாங்கள் பொழுதுபோக்கிற்காக புதிய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சில மர்மநபர்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண்களை சீர்கெடுக்கும் வகையில் ஆபாசமாக, பாலியல் உணர்வுகளை துாண்டும் வகையில் பேசினர். போலிக்கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாக சித்தரித்து, படங்களை வெளியிட்டனர். இதுகுறித்து கேட்ட போது, சிலர் மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட சைபர் க்ரைம் போலீசார், ஆன்-லைனில் மனு அளிக்குமாறு அறிவுறுதினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X