உலக தென்னை தினத்தை கொண்டாடிய வேளாண் துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக தென்னை தினத்தை கொண்டாடிய வேளாண் துறை

Added : செப் 03, 2021
Share
தொண்டாமுத்தூர்;வேளாண்மை துறை சார்பில், நரசீபுரத்தில் உள்ள தென்னை நெட்டை குட்டை ஒட்டு மையத்தில், உலக தென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு, தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரேவதி தலைமை வகித்தார். இதில், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த சத்து
உலக தென்னை தினத்தை  கொண்டாடிய வேளாண் துறை

தொண்டாமுத்தூர்;வேளாண்மை துறை சார்பில், நரசீபுரத்தில் உள்ள தென்னை நெட்டை குட்டை ஒட்டு மையத்தில், உலக தென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு, தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரேவதி தலைமை வகித்தார். இதில், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, தென்னை ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ மற்றும் காண்டாமிருக வண்டு மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.வேளாண்மை துறை சார்பில், தென்னை வளரும் பருவம் குறித்த கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலர்கள் முகமதுதாரிக், பாரதி மற்றும் தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X