பொது செய்தி

தமிழ்நாடு

மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் பழங்குடிகளிடம் விழிப்புணர்வு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் குறித்து தெரிவிக்க, மலையோர கிராமங்களில், தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை, சிறப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழக, கேரள எல்லையை ஒட்டிய வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட் நடமாட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதைத்தடுக்க, தமிழக மற்றும் கேரள போலீசார் தொடர் கண்காணிப்பில், ஈடுபட்டு வருகின்றனர்.நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார்,

கோவை:மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் குறித்து தெரிவிக்க, மலையோர கிராமங்களில், தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை, சிறப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழக, கேரள எல்லையை ஒட்டிய வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட் நடமாட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதைத்தடுக்க, தமிழக மற்றும் கேரள போலீசார் தொடர் கண்காணிப்பில், ஈடுபட்டு வருகின்றனர்.நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார், கோவை அருகே உள்ள மலையோர கிராமங்களான ஆனைகட்டி, பில்லுார் அணை, மதுக்கரை, கே.ஜி.சாவடி, காடுமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக போலீசாரும், கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை, தொடர்ந்து சிறப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் குறித்து தெரிவிக்க, மலை கிராமங்களில் உள்ள பழங்குடியினருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, பின்தங்கிய கிராமங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X