பொது செய்தி

தமிழ்நாடு

இணைந்து செயல்பட தயார்: அமெரிக்க தூதரக அதிகாரி பேச்சு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை உறுப்பினர்கள் உடன், சென்னை அமெரிக்க துாதரகம் துணை துாதரக அதிகாரி ஜூடித் ரவின் சந்திப்பு நிகழ்ச்சி, கோவையில் நடந்தது. அமெரிக்க சந்தையை பயன்படுத்துதல், இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரித்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.அப்போது, பேசிய ஜூடித் ரவின், ''அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவில் கடந்த, 10

கோவை:இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை உறுப்பினர்கள் உடன், சென்னை அமெரிக்க துாதரகம் துணை துாதரக அதிகாரி ஜூடித் ரவின் சந்திப்பு நிகழ்ச்சி, கோவையில் நடந்தது. அமெரிக்க சந்தையை பயன்படுத்துதல், இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரித்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.அப்போது, பேசிய ஜூடித் ரவின், ''அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவில் கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காண முடிகிறது. அமெரிக்கா, இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாகவும், நேரடி முதலீடு செய்யும் ஆதாரமாகவும் திகழ்கிறது.முதலீட்டுக்கான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி, இந்திய தொழில் நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரும் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கண்டுள்ளன. இந்த முன்னேற்றம் மேலும் கூடுதலாக ஏற்பட வேண்டும். கோவை தொழில் துறையினருடன் நட்புறவு கொள்ளவும், இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம்,'' என்றார்.முன்னதாக, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன் பேசுகையில், ''சிறு, குறு நிறுவனங்கள், 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இங்குள்ள நிலையில், இச்சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X