பொது செய்தி

தமிழ்நாடு

இன்று கனரா வங்கி வீடு, கார் கடன் மேளா

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் கனரா வங்கி சார்பில், மாபெரும் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் மேளா, இன்று நடக்கிறது.இந்த கடன் மேளாவில், 6.90 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் பெறலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு, 659 ரூபாய் முதல் மாதத்தவணை செலுத்தி வீடு கட்ட, வாங்க மற்றும் புதுப்பிக்க கடன் வழங்கப்படுகிறது. 65 வயது வரை கடன் பெற்று, 75 வயது வரை திரும்பி செலுத்தும் வசதி உள்ளது.7.30 சதவீத வட்டியில், வாகன கடனும்

கோவை:கோவையில் கனரா வங்கி சார்பில், மாபெரும் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் மேளா, இன்று நடக்கிறது.இந்த கடன் மேளாவில், 6.90 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் பெறலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு, 659 ரூபாய் முதல் மாதத்தவணை செலுத்தி வீடு கட்ட, வாங்க மற்றும் புதுப்பிக்க கடன் வழங்கப்படுகிறது. 65 வயது வரை கடன் பெற்று, 75 வயது வரை திரும்பி செலுத்தும் வசதி உள்ளது.7.30 சதவீத வட்டியில், வாகன கடனும் வழங்கப்படுகிறது. வாகனத்தின் மதிப்பில், 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் சாலையில் உள்ள கிளை, விளாங்குறிச்சி சேரன் மாநகர் கிளை, பாப்பம்பட்டி பிரிவு கண்ணாம்பாளையம் கிளை, பொள்ளாச்சி பங்களா சாலை கிளை, பேரூர் வேடப்பட்டி கிளை, கோவை ஜவான்ஸ் பவன் ரவுண்டானா கிளை ஆகிய, கனரா வங்கிகளில் கடன் மேளா நடக்கிறது.நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் பெற, மேற்கண்ட வங்கிகளுக்கு முறையே, 94890 43575, 88704 71159, 94890 43903, 94890 43461, 94890 11076, 82489 73548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X