பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் உடல் நிலை: தினமும் பரிசோதிக்க உத்தரவு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை;மாநகராட்சி பள்ளிகளில், 'பல்ஸ் ஆக்ஸி' மீட்டர் மூலமாக, மாணவர்களை தினமும் பரிசோதிக்க, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மாநகராட்சியின், 28 பள்ளிகளில், 9, 10, 11 மற்றும், 12ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படுகின்றன. தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என, மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில், நேற்று ஆய்வு செய்த கமிஷனர், 'தினமும் கிருமி நாசினி

கோவை;மாநகராட்சி பள்ளிகளில், 'பல்ஸ் ஆக்ஸி' மீட்டர் மூலமாக, மாணவர்களை தினமும் பரிசோதிக்க, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மாநகராட்சியின், 28 பள்ளிகளில், 9, 10, 11 மற்றும், 12ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படுகின்றன. தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என, மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில், நேற்று ஆய்வு செய்த கமிஷனர், 'தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், நுழைவாயிலில் ஒரு ஊழியரை நியமித்து, மாணவ - மாணவியரின் உடல் வெப்ப நிலையை, பரிசோதிக்க வேண்டும், யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்தால், அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.அதன்பின், கவுண்டம்பாளையத்தில் மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பதை பார்வையிட்ட அவர், மையத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மையங்களை, பயன்பாட்டுக்கு கொண்டு வர, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.காந்தி மாநகரில், கழிவு நீர் பம்ப் செய்யும் ஸ்டேஷனை ஆய்வு செய்த கமிஷனர், இணைக்கப்பட்ட பகுதியில் பதிக்கப்படும் குழாய்களுக்கு இணைப்பு கொடுக்க, அறிவுறுத்தினார்.நகர பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் ஞானவேல், உதவி நிர்வாக பொறியாளர் செந்தில் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X