பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை;டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் கற்றல் அகாடமி சார்பில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி, ஆன்லைன் வாயிலாக நடந்தது.பயிற்சியில், நாட்டின் வளங்கள் மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுவது, மாணவர்களிடம் தலைமைப்பண்பை ஏற்படுத்துவது, முடிவெடுக்கும் திறனை அதிகரிப்பது குறித்த பல்வேறு கருத்துகள்

கோவை;டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் கற்றல் அகாடமி சார்பில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி, ஆன்லைன் வாயிலாக நடந்தது.பயிற்சியில், நாட்டின் வளங்கள் மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுவது, மாணவர்களிடம் தலைமைப்பண்பை ஏற்படுத்துவது, முடிவெடுக்கும் திறனை அதிகரிப்பது குறித்த பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.இத்திட்டத்தின் மூலம், தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 16 மாநிலங்களில், ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை, கல்லுாரிகளில் இருந்து, 200 பெண் ஆசிரியர்கள் பங்கேற்று, பயன்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர், டாக்டர் மம்தா ராணி அகர்வால், பேராசிரியர் பூனியா, ஐ.ஐ.டி., திருப்பதி இயக்குனர் சத்தியநாராயணன், எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று, ஆசிரியர்களுக்கு ஊக்கமளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X