பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பருத்தி கிடங்கு அமைக்க 'சிஸ்பா' கோரிக்கை

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:தமிழகத்தில் சி.சி.ஐ., கிடங்கு அமைக்க, தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம்(சிஸ்பா) தமிழக அமைச் சர்களிடம் முறையிட்டுள்ளது.'சிஸ்பா' கவுரவ செயலாளர் ஜெகதீஸ் சந்திரன், உதவி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சென்னையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, காந்தி, ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து, மனு அளித்தனர்.மனு விபரம்:தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர நுாற்பாலைகள் அதிகம்

கோவை:தமிழகத்தில் சி.சி.ஐ., கிடங்கு அமைக்க, தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம்(சிஸ்பா) தமிழக அமைச் சர்களிடம் முறையிட்டுள்ளது.'சிஸ்பா' கவுரவ செயலாளர் ஜெகதீஸ் சந்திரன், உதவி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சென்னையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, காந்தி, ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து, மனு அளித்தனர்.மனு விபரம்:தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர நுாற்பாலைகள் அதிகம் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பருத்தி கழகம்(சி.சி.ஐ.,), அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து ஆண்டுதோறும், 150 லட்சம் பேல் பஞ்சு வாங்குகிறது.தமிழகத்தில் சி.சி.ஐ., கிடங்கு அமைந்தால், இங்குள்ள நுாற்பாலைகள் தொலைதுார போக்குவரத்து சிரமமின்றி, எளிதில் பஞ்சு பெறமுடியும். தவிர, பஞ்சு ஏலத்தில் அதிக விலை கொடுத்து, மற்ற மாநில பஞ்சாலைகளுடன் போட்டியிட வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும்.மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தை எங்கள் சங்கம் அணுகியபோது, தமிழகத்தில் உள்ள, 1 சதவீதம் 'மார்க்கெட் கமிட்டி செஸ்'சை அரசு விலக்கிக்கொண்டு, பதிலாக விற்பனை சேவை வரியை அமல்படுத்தினால், வேண்டியதை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.தமிழக அரசு, 2.5 சதவீதம் விற்பனை சேவை வரியை அனுமதித்தால், 988 கோடி மாநிலப் பங்கு வரி வருவாய் என அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.நுாற்பாலைகளை மேலும் துவங்கினால் பொருளாதாரம், வேலை வாய்ப்பு பெருகும். தமிழக அரசு இதனை ஆவண செய்ய வேண்டுகிறோம்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X