ஊட்டச்சத்து என்றால் என்ன... விழிப்புணர்வுக்கு அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து என்றால் என்ன... விழிப்புணர்வுக்கு அறிவுறுத்தல்

Added : செப் 03, 2021
Share
கோவை:'ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து, கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று அரசு துறையினருக்கு, கோவை கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம், செயல்படுத்தப்படும் போஷான் அபியான் - தேசிய ஊட்டச்சத்து மாத விழா குறித்து, அனைத்து துறை அலுவலர் ஒருங்கிணைப்புக் கூட்டம், நேற்று நடந்தது.இதில், கலெக்டர் சமீரன்

கோவை:'ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து, கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று அரசு துறையினருக்கு, கோவை கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம், செயல்படுத்தப்படும் போஷான் அபியான் - தேசிய ஊட்டச்சத்து மாத விழா குறித்து, அனைத்து துறை அலுவலர் ஒருங்கிணைப்புக் கூட்டம், நேற்று நடந்தது.இதில், கலெக்டர் சமீரன் பேசியதாவது:போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைத்தல், தினமும் 5 நிமிடம் யோகா செய்வது, பாரம்பரிய சிறுதானியங்களில் உணவுப் பொருள் தயாரிக்கும் போட்டி, எடை மற்றும் உயரம் குறைந்த குழந்தைகளை கண்டறிந்து, ஊட்டச்சத்து வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த செயல்பாடுகளுக்கு, அனைத்து அரசு துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊட்டச்சத்து விழிப் புணர்வை, மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும். ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து, கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் சமீரன் பேசினார்.கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்ட திட்ட அலுவலர் மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X