சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள்

Added : செப் 03, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை : மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா; மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். அவர் மீது மூன்று 'போக்சோ' வழக்குகளை பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி.,
Siva Shankar Baba, child sexual abuse

சென்னை : மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா; மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். அவர் மீது மூன்று 'போக்சோ' வழக்குகளை பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.


latest tamil news



இதில், ஒரு வழக்கில் அவர் மீது, 300 பக்க குற்றப் பத்திரிகையை, நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். மற்ற இரண்டு வழக்குகளில் குற்றப் பத்திரிகையை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில், சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது, மேலும் ஒரு முன்னாள் மாணவி; முன்னாள் மாணவியின் தாய் ஒருவரும், பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளனர்.

இதில், மாணவி கொடுத்த புகாரில், போக்சோ சட்டத்திலும்; மாணவியின் தாய் அளித்த புகாரில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்திலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளிலும் சிவசங்கர் பாபா விரைவில் கைது செய்யப்படலாம் என சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
03-செப்-202113:03:20 IST Report Abuse
Vena Suna முன்னாள் மாணவிகள் இவ்வளவு நாட்கள் ஏன் சும்மா இருந்தார்கள் இப்படி ஒவ்வொருவராக இப்பொழுது கிளம்புகிறார்கள் ஆண்டவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
03-செப்-202112:26:01 IST Report Abuse
vpurushothaman விடாதீங்க...இந்த பாலியல் கொடூரர்கள் வெளியிலேயே வரக் கூடாது. இவனுக்குத் தரும் தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
03-செப்-202111:37:10 IST Report Abuse
சீனி எதனை பிரேமானந்தா, நித்தியானந்தா, பாபாக்கள் ஜெயிலுக்கு போனாலும், மக்களும் திருந்தமாட்டார்கள், இவர்களும் திருந்த மாட்டார்கள். மடாதிபதிகளும், சீடர்களும் கூட்டாக பத்தர்கள் காசில் குளிர்காய்ந்தவர்கள் தான், பிரச்சனை வரும்போது, மேலே இருக்கவனை மாட்டிவிட்டு, சீடர் கூட்டம் கலைந்துவிடும். புராண காலத்தில் மன்னர்கள் தலையை சீவினர். இவர்களும் தலையை சீவிக்கொண்டு வெளியே தான் உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X