அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடையற்ற தொலைத்தொடர்பு: எம்.பி., நடராஜன் வலியுறுத்தல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்ட தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு கூட்டம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகத்தில் நடந்தது.கோவை எம்.பி., நடராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் வேங்கடசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, பி.எஸ்.என்.எல்., டவர்களை பராமரிக்க, தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்பன

கோவை:கோவை மாவட்ட தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு கூட்டம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகத்தில் நடந்தது.கோவை எம்.பி., நடராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் வேங்கடசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, பி.எஸ்.என்.எல்., டவர்களை பராமரிக்க, தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.எம்.பி., நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ''மக்கள் பி.எஸ்.என்.எல்., சேவையை பெரிதும் நம்புகின்றனர். கிராமங்கள் தோறும் பரந்து விரிந்து, கிளைகளை கொண்டுள்ள பி.எஸ்.என்.எல்., துறையை பாதுகாத்து, அதன் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். கிராமங்களில் இணைய சேவை தடையின்றி கிடைப்பதில் பிரச்னை உள்ளது. பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு, தடையற்ற சேவையை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X