பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையை வாட்டியெடுக்கும் வாடல் நோய்: ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அறிவுரை

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஆனைமலை;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் தென்னையில், வேர் வாடல் மற்றும் இலை அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் பேரிழப்புகளை சந்தித்து வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், 1.45 லட்சம் ஏக்கர் பரப்பில், தென்னை சாகுபடி உள்ளது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலால் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி,
 தென்னையை வாட்டியெடுக்கும் வாடல் நோய்: ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அறிவுரை

ஆனைமலை;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் தென்னையில், வேர் வாடல் மற்றும் இலை அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் பேரிழப்புகளை சந்தித்து வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், 1.45 லட்சம் ஏக்கர் பரப்பில், தென்னை சாகுபடி உள்ளது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலால் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தென்னையில் வேர் வாடல் மற்றும் இலை அழுகல் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால், பாதிப்புக்குள்ளாகும் தென்னை மரங்களை, விவசாயிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.தென்னை ஆராய்ச்சி நிலையம் முனைவர் ராஜேஸ்வரி மற்றும் பிரணீதா வெளியிட்டுள்ள அறிக்கை:வேர் வாடல் நோய் தாக்கிய, தென்னை மரங்களின் ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறி, கீழ்நோக்கி வளைந்து காணப்படும். நடுவிலுள்ள ஓலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும். ஓலையின் ஓரங்கள் கருகி, உதிர்ந்து குச்சிகள் மட்டும் காணப்படும்.குருத்து கருகுதல், பூங்கொத்து கருகுதல், மொட்டு உதிர்தல், வேர் அழுகுதல், மட்டைகள் மற்றும் தேங்காய் பருப்பு பருமன் குறைதல், வாடல் நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.நோயை கட்டுப்படுத்த, உர மேலாண்மையில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளான, 50 கிலோ தொழு உரம், ஐந்து கிலோ வேம்பு புண்ணாக்கு, 1.3 கிலோ யூரியா, இரண்டு கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஷ், ஒரு கிலோ மெக்னீசியம் சல்பேட், ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.வட்டப்பாத்தியில் தட்டைப்பயிர், சணப்பை, கலப்பகோணியம், பியூரேரியா மற்றும் தக்கைப்பூண்டு பயிரிட்டு பூக்கும் பருவத்தில் உழவு செய்ய வேண்டும்.நோய் பரப்பும் தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சிகளை கட்டுப்படுத்த, 'போரேட்' குருணை மருந்து, 20 கிராமை, 200 கிராம் மணலுடன் கலந்து அல்லது வேம்பு புண்ணாக்கு துாள், 250 கிராம் அதே அளவு மணலுடன் கலந்து, குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும்.'டிரைகோடெர்மா விரிடி' மற்றும் 'பேசில்லஸ் சப்டிலிஸ்' தலா, நுாறு கிராம் மற்றும் ஐந்து கிலோ சாண எரு, 200 கிராம் பாஸ்போபாக்டீரியா ஒன்றாக கலந்து, மூன்று மாத இடைவெளியில் வைக்க வேண்டும்.அதன்பின், ஒரு மாதம் கழித்து, 75 கிராம் 'காப்பர் சல்பேட்' மருந்தை இட வேண்டும். இலை அழுகல் நோயை கட்டுப்படுத்த, 'ஹெக்ஸகோனசோல்' மருந்தை, ஐந்து மி.லி., தண்ணீரில் கலந்து குருத்தில் ஊற்றி கட்டுப்படுத்தலாம். மேலும், சந்தேகங்களுக்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X