பொது செய்தி

தமிழ்நாடு

உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி: உறுதி செய்வது அவசியம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
உடுமலை:தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியது குறித்து, ஊரக வளர்ச்சித்துறையினர் உறுதி செய்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமம்தோறும், சுகாதாரத்துறை சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம்கள், சுழற்சி முறையில்

உடுமலை:தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியது குறித்து, ஊரக வளர்ச்சித்துறையினர் உறுதி செய்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமம்தோறும், சுகாதாரத்துறை சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம்கள், சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.தனியார் நிறுவனங்கள் தரப்பில், ஊழியர்கள், தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து கண்காணிக்கின்றனர்; ஊரடங்கு விதிமுறைகளின்படி, வணிக கடைகளில் பணிபுரிவோர் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யுமாறு, அரசு, உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.ஆனால், நாள்தோறும், நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே இடத்தில், பணியாற்றும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் குறித்து, ஊரக வளர்ச்சித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், விழிப்புணர்வு இல்லாதது, தயக்கம் உட்பட காரணங்களால், தடுப்பூசி செலுத்தாமல், உள்ளனர். தற்போது, பணியின் போது, முகக்கவசமும் தொழிலாளர்கள் அணிவதில்லை.இதனால், தொற்று பரவுவதை தடுக்க, ஊரக வளர்ச்சித்துறையினர், வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த வேண்டும்.சம்பந்தப்பட்ட கிராமங்களில், முகாம் நடக்கும் போது, அத்திட்ட தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கிராமங்களில், தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X