அரசு அறிவித்த தினக்கூலி பெற்றுத்தர எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அறிவித்த தினக்கூலி பெற்றுத்தர எதிர்பார்ப்பு

Added : செப் 03, 2021
Share
வால்பாறை:வால்பாறையில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜூலை, 1ம் தேதியுடன் பழைய சம்பள ஒப்பந்தம் நிறைவடைந்தது.இந்நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 425.50 வழங்க வேண்டும் என்று, அரசு கடந்த மாதம், 18ம் தேதி அரசாணை வெளியிட்டது. அரசின் உத்தரவால், தமிழக தேயிலை தொழிலாளர்கள்

வால்பாறை:வால்பாறையில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜூலை, 1ம் தேதியுடன் பழைய சம்பள ஒப்பந்தம் நிறைவடைந்தது.இந்நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 425.50 வழங்க வேண்டும் என்று, அரசு கடந்த மாதம், 18ம் தேதி அரசாணை வெளியிட்டது. அரசின் உத்தரவால், தமிழக தேயிலை தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தேயிலை தொழிலாளர்கள் கூறுகையில், 'விலைவாசிக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் தொழிலாளர்கள் தவித்து வந்த நிலையில், தமிழக முதல்வர், தேயிலை தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 425.50 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த கூலி உயர்வை பெற்றுத்தர, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X