பொது செய்தி

தமிழ்நாடு

உரிமம் பெறாத நாற்றுப்பண்ணைகள் விதை: ஆய்வுத்துறை எச்சரிக்கை

Added : செப் 03, 2021
Share
Advertisement
உடுமலை:உரிமம் பெறாத நாற்றுப்பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான, தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக, வாங்கி நடவு செய்து

உடுமலை:உரிமம் பெறாத நாற்றுப்பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான, தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக, வாங்கி நடவு செய்து வருகின்றனர்.விதை ஆய்வுத்துறை துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை :நாற்றுப்பண்ணைகள் அனைத்தும் உரிமம் பெற்றே, நாற்றுக்களை விற்பனை செய்ய வேண்டும். நாற்றுப்பண்ணையாளர்கள் கொள்முதல் செய்யும் விதை ரகங்களின் பதிவு சான்று நகலை, ரகம் வாரியாக பராமரிப்பதோடு, உற்பத்தி செய்யும், பயிர், ரகம், விதை குவியல், காலாவதி நாள், நாற்று உற்பத்தி செய்த நாள் மற்றும் நாற்று விற்பனை செய்த நாள் அடங்கி இருப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.நாற்றுப்பண்ணைகள் முன், நாற்றுக்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும். மேலும், விற்பனை செய்யும் நாற்றுக்களின் ரசீதுகளில் விவசாயிகளின் கையொப்பம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.உரிய இருப்பு பதிவேடு, விவசாயிகளுக்கு ரசீது வழங்காமல் நாற்று விற்பனை செய்யும் பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய உரிமம் பெற, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில், நாற்றுப்பண்ணை இருப்பிட வரைபடத்துடன், வட்டார விதை ஆய்வாளர் வாயிலாக, விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல் இயங்கும் நாற்றுப்பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு,துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X