போலீஸ் செய்திகள்...

Added : செப் 03, 2021
Share
Advertisement
தொழிலாளி கொலைமதுரை: நாகமலை புதுக்கோட்டை கால்வாயில் நேற்று காலை 35 வயதுள்ள ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. சட்டை பையில் சமயநல்லுார் பழைய பேப்பர் வாங்குபவரின் விசிட்டிங் கார்டு இருந்தது. அதில் இருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது, இறந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி நார்ணாபுரம்

தொழிலாளி கொலை

மதுரை: நாகமலை புதுக்கோட்டை கால்வாயில் நேற்று காலை 35 வயதுள்ள ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. சட்டை பையில் சமயநல்லுார் பழைய பேப்பர் வாங்குபவரின் விசிட்டிங் கார்டு இருந்தது. அதில் இருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது, இறந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி நார்ணாபுரம் மகேஸ்வரன் எனத்தெரிந்தது. இவர் பழைய பேப்பர், பாட்டில்களை சேகரித்து அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு தனி ஆளாக வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் ஆகாதவர். போதையால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் மோதி ஆசிரியை பலி

மதுரை: நத்தம் ரோட்டில் கடவூர் அருகே நான்கு வழிச்சாலை பணி நடக்கிறது. இதற்காக ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் காயமுற்றனர். அப்போது ஒரு கார் வெள்ளையம்பட்டி குறள்மணி 22, ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலர் பின்னால் அமர்ந்து வந்த ஆதனுார் மலையாண்டி மகள் ஆர்த்தி 22, பலியானார். இவர் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியை. பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் நகை திருட்டு

மதுரை: ஒத்தக்கடை புதுத்தாமரைப்பட்டி மங்களாபுரம் சண்முககுமார் 27. குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டினுள் புகுந்த மர்மநபர் மூன்றரை பவுன் நகைகள், வளையல், வெள்ளி பொருட்களை திருடிச்சென்றார்.

மூதாட்டி மீது கந்துவட்டி வழக்கு

மதுரை: விரகனுார் கீதா 48. இவர் அப்பகுதி அங்கம்மாளிடம் 62, கடந்த 2010ல் மகன் திருமணத்திற்காக ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். கொரோனா காரணமாக வட்டி செலுத்த முடியாத நிலையில், கூடுதல் வட்டி கேட்டு அங்கம்மாள் மிரட்டியதாக சிலைமான் போலீசில் புகார் செய்தார். அவர் மீது கந்துவட்டி தடுப்புச்சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

அடுத்தடுத்து 4 வீடுகளில் திருட்டு

மேலுார்: கீழவளவில் செந்தில்குமார், சுல்தான், கண்ணன், ராஜீவ்காந்தி உள்ளிட்டோரின் வீடுகளுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தவர்கள் 4அலைபேசிகள், ரூ.13 ஆயிரத்து 900 மற்றும் ஒரு டூவீலரை திருடி சென்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து வீடுகளில் நடந்த தொடர் திருட்டால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்

-அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கிருந்து வேனில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தகவல் வெளியானது. எஸ்.ஐ., முத்துப்பாண்டி மற்றும் போலீசார் சென்றபோது எதிரே வந்த வேனை சோதனையிட்டனர். ஐம்பது மூடைகளில் 2500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மதுரை பாலமுருகன் 31, மாரியப்பனை 37, கைது செய்தனர்.

வழிப்பறி திருடர்கள் கைது

வாடிப்பட்டி : சமயநல்லுார் டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் தனிப்படை எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகுமார், வெங்கடேஷ் மற்றும் போலீசார் நாகமலை புதுக்கோட்டையில் ரோந்து சென்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட டபேதார் சந்தை விஜயகுமார் 25, தேனுார் கவுதம் பாண்டியனை 21, கைது செய்து 4 பவுன் நகை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

மாணவர் தற்கொலை

வாடிப்பட்டி : குட்லாடம்பட்டி கண்ணன் மகன் சக்திவேல் 20, தனியார் பொறியியல் கல்லுாரி 3ம் ஆண்டு படித்தார். சில நாட்களுக்கு முன் காதல் பிரச்னை தொடர்பாக குடும்பத்தினர் கண்டித்தனர். மனமுடைந்த சக்திவேல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு நான்குவழிச்சாலையில் வாகன சோதனை செய்தனர். பெங்களூரில் இருந்து 292 மதுபாட்டில்களுடன் வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்கள் கரடிக்கல் சுரேஷ் 29, பல்கலை நகர் ராஜேந்திரனை 48, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X