பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் கிடைக்காமல்...தவியாய் தவிப்பு!சாகுபடி பணிக்கு திண்டாடும் பாசன விவசாயிகள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
உடுமலை;பி.ஏ.பி., அமராவதி பாசன பகுதிகளில், சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, பல ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம் உட்பட சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அமராவதி அணையில்

உடுமலை;பி.ஏ.பி., அமராவதி பாசன பகுதிகளில், சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, பல ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம் உட்பட சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அமராவதி அணையில் திருப்தியான நீர் இருப்பு காரணமாக, கல்லாபுரம் மற்றும் இதர ஆயக்கட்டு பகுதிகளில், நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. இரு பாசனப்பகுதிகளிலும், 'காரிப்' பருவம், விவசாயிகளின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.இந்நிலையில், விதை, அடியுரம், இடுபொருட்கள், மருந்து தெளித்தல் உட்பட பணிகள், சாகுபடி செலவுக்காக விவசாயிகளுக்கு, பயிர்க்கடன் மட்டுமே, முக்கிய உதவியாக உள்ளது.வழக்கமாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, சாகுபடி பணிகளுக்கு முன்பாக, பயிர்க்கடன் வழங்குவதற்கான பணிகள் துவங்கும்.விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, சாகுபடி காலத்தில், பயிர்க்கடன் கிடைப்பதுடன், உரமும் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, பயிர்க்கடன் பெறும் விவசாயிகளிடமிருந்து, விளைநிலத்திலுள்ள சாகுபடிக்கு ஏற்ப, பயிர் காப்பீடும் செய்யப்படும். இவ்வாறு, முக்கிய சீசனில், கைகொடுத்து வந்த பயிர்க்கடன், நடப்பாண்டு இதுவரை திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.முந்தைய அ.தி.மு.க., அரசு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.அதற்கான, சான்றிதழ்களும் அப்போதே வினியோகிக்கப்பட்டது; ஆனால், திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் பெரும்பாலான விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படவில்லை.அதே போல், நடப்பு சீசனுக்கு, பயிர்க்கடன் வழங்குவதற்கான, விண்ணப்பங்களும் பெறப்படாமல் உள்ளது.விவசாயிகள் கூறியதாவது:குறித்த நேரத்தில், அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், விளைநிலங்களில், சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.விதை, உரம், தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ள நிலையில், சாகுபடிக்கு பயிர்க்கடன் அவசியமாகியுள்ளது. பல விவசாயிகள், இடுபொருட்கள் வாங்க முடியாமல், முதல் சுற்று பாசனத்தில், விதைப்பை துவக்காமல், உள்ளனர்.இரண்டாம் சுற்று துவங்கியுள்ள நிலையில், விரைவில், பயிர்க்கடன் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, விதைப்பு செய்துள்ள பயிர்களுக்கு, உரம் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.'பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள் அரசால் தொடர்ந்து வழங்கப்படுகிறது; எனவே, பணிகள் தாமதமாகிறது,' என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பல ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கு ஆதாரமான பயிர்க்கடனை உடனடியாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X