தமிழ்நாடு

செயல்படாத கண்காணிப்பு கேமராக்களால் போலீசாருக்கு சவால்!

Added : செப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை விரிவாக்கப்பகுதிகளில் இருந்தும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்களை தடுப்பதும், குற்றவாளிகளை அடையாளம் காணுவதும் போலீசாருக்கு சவாலாக உள்ளது. ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தபட்சம் ஒரு கேமரா பொருத்த போலீசார் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.நகரில் நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை என குற்றங்கள் ஆங்காங்கு நடக்கின்றன. அதிகாலையில் வீடு புகுந்து
செயல்படாத கண்காணிப்பு கேமராக்களால் போலீசாருக்கு சவால்!

மதுரை : மதுரை விரிவாக்கப்பகுதிகளில் இருந்தும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்களை தடுப்பதும், குற்றவாளிகளை அடையாளம் காணுவதும் போலீசாருக்கு சவாலாக உள்ளது. ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தபட்சம் ஒரு கேமரா பொருத்த போலீசார் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

நகரில் நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை என குற்றங்கள் ஆங்காங்கு நடக்கின்றன. அதிகாலையில் வீடு புகுந்து நகைபறிக்கும் அளவிற்கு மக்கள் விழிப்புணர்வின்றி உள்ளனர். குற்றங்களை தடுக்க நகரில் 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் போலீசார், பொதுமக்கள், வணிகர்கள் பொருத்தியுள்ளனர்.

விரிவாக்க பகுதிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. அப்படி இருந்தாலும் அது காட்சிப்பொருளாக உள்ளது.சமீபத்தில் ஒரு வீட்டில் அதிகாலையில் புகுந்த திருடன், நகையை பறித்துக்கொண்டு தப்பினான். அவரது உருவம் தெளிவாக தெரியாத வகையில் கண்காணிப்பு கேமரா மங்கலாக இருந்தது. இருநாட்களுக்கு முன்கூட ஒரு திசையில் இருந்த கேமராவை வேறு திசைக்கு மாற்றி வீட்டில் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

போலீசார் கூறியதாவது: ரூ.பல லட்சம் செலவழித்து வீடு கட்டுபவர்கள், ரூ.சில ஆயிரம் செலவழித்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த யோசிக்கின்றனர். எங்கிருந்தாலும் வீட்டை கண்காணிக்கும் வசதி வந்து விட்டது. அதற்கு மூலக்காரணம் கண்காணிப்பு கேமராதான். பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த விரும்பினால் போலீசாரை( வாட்ஸ் ஆப் 83000 21100) தொடர்பு கொள்ளலாம்.

தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். குடியிருப்போர் சங்கங்கள் பல தாங்களாக முன்வந்து பொருத்தி வருகின்றனர். எங்கள் இலக்கு ஒவ்வொரு தெருவுக்கும் கட்டாயம் ஒரு கேமரா இருக்க வேண்டும் என்பதாகும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
04-செப்-202102:14:12 IST Report Abuse
Manian . மாமூ் கொடுத்து வேலை வாங்குன எங்களுக்கு அந்த கடனை அடைக்கவே நேரம் பத்தலை. கேமிரா சரியா வேலை சேஞ்சா, மாமூல் வாங்காம இல்லே வேலை செய்யணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X