பொது செய்தி

தமிழ்நாடு

இன்னும் ஒரு அடி உயர்ந்தால் பரம்பிக்குளம் நிரம்பி வழியும்

Added : செப் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணையான, பரம்பிக்குளம் நிரம்ப இன்னும் ஒரு அடி நீர்மட்டம் உயர வேண்டியுள்ளது. இதனால், அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி, டாப்சிலிப் அடுத்த கேரள வனப்பகுதியில், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் பிரதான அணையாக பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. மொத்தம், 72 அடி உயரமும், 17.82 டி.எம்.சி., நீரின் கொள்ளளவும் கொண்டது.இந்த அணைக்கு
 இன்னும் ஒரு அடி உயர்ந்தால் பரம்பிக்குளம் நிரம்பி வழியும்

பொள்ளாச்சி:பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணையான, பரம்பிக்குளம் நிரம்ப இன்னும் ஒரு அடி நீர்மட்டம் உயர வேண்டியுள்ளது. இதனால், அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி, டாப்சிலிப் அடுத்த கேரள வனப்பகுதியில், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் பிரதான அணையாக பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. மொத்தம், 72 அடி உயரமும், 17.82 டி.எம்.சி., நீரின் கொள்ளளவும் கொண்டது.இந்த அணைக்கு சோலையார் மின்நிலையம்-1, சேடல் அணை மற்றும் பரம்பிக்குளம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து, நீர் வரத்து உள்ளது. பருவமழை பரவலாக பெய்து வருவதால், சோலையாறு அணை நீர்மட்டம் நிரம்பிய நிலையில் உள்ளது.மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால், சோலையாறு அணையில் இருந்து பரம்பிக்குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், நீர்மட்டம் மெல்ல உயர்ந்தது.பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி பாசனத்துக்காக, துாணக்கடவு 'டனல்' வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு காண்டூர் கால்வாய் வழியாக செல்கிறது.ஆனால், நீர் வரத்து அதிகரிப்பு மற்றும் தொடர் மழை காரணமாக, பரம்பிக்குளம் அணை நிரம்பி வருகிறது. முழு கொள்ளளவும் நிரம்ப, இன்னும், ஒரு அடி மட்டுமே நீர்மட்டம் உயர வேண்டும் என்பதால், அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து உள்ளதால் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 71.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,331 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 907 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X