சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குவி கண்ணாடி உடைப்பு: மர்மநபர்கள் கைவரிசை

Added : செப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில், வால்பாறை உள்ளிட்ட வளைவுகள் மிகுந்த மலைப்பாதைகள், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத திருப்பங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், குவி கண்ணாடி அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, திருப்பத்தில் வரும் வாகனங்களை பார்த்து, வேகத்தை குறைத்து விபத்தை தவிர்க்க முடிகிறது.இந்த கண்ணாடி அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்
 குவி கண்ணாடி உடைப்பு: மர்மநபர்கள் கைவரிசை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில், வால்பாறை உள்ளிட்ட வளைவுகள் மிகுந்த மலைப்பாதைகள், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத திருப்பங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், குவி கண்ணாடி அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, திருப்பத்தில் வரும் வாகனங்களை பார்த்து, வேகத்தை குறைத்து விபத்தை தவிர்க்க முடிகிறது.இந்த கண்ணாடி அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியபோது, பரிசோதனை முறையில், கோவை ரோட்டில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரே, 'சென்டர் மீடியனில்' அமைக்கப்பட்டது. இந்த கண்ணாடி வாயிலாக, அலுவலக வளாகத்தில் இருந்து, பிரதான ரோட்டுக்கு வரும் வாகனங்கள், வாகனங்கள் வருகின்றனவா என்பதை கவனித்து, வெளியில் வருவதற்கு வசதியாக இருந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், குவி கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அரசு அலுலகம் முன்பாகவே, அரசு சொத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-202123:43:18 IST Report Abuse
 Ram Pollachi விதிமுறையை மீறி ஆக்கிரமித்து ரோட்டில் கட்டப்பட்ட அலுவலகம் இது. எதிரில் புதிய நீதிமன்றம் வருகிறது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X