பட்டுக்கூடுகள் விலை உயர்வால் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுக்கூடுகள் விலை உயர்வால் மகிழ்ச்சி

Added : செப் 03, 2021
Share
உடுமலை:அரசு கொள்முதல் மையங்களில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு பட்டுக்கூடுகளின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக, 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர்.உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளை, பட்டு வளர்ச்சித்துறையின், கொள்முதல் மையம் வாயிலாக

உடுமலை:அரசு கொள்முதல் மையங்களில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு பட்டுக்கூடுகளின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக, 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர்.உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளை, பட்டு வளர்ச்சித்துறையின், கொள்முதல் மையம் வாயிலாக ரீலர்கள் வாங்கிச்செல்கின்றனர்.ஊரடங்கு உட்பட காரணங்களால், பட்டு நுால் மற்றும் பட்டுத்துணி உற்பத்தி பாதிப்படைந்தது; வெண்பட்டுக்கூடுகளுக்கும் போதிய விலை கிடைக்கவில்லை. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து, பட்டுக்கூடு விலை சரிந்ததால், விவசாயிகள் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, அரசு கொள்முதல் மையங்களில், வெண்பட்டுக்கூடுகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கோவை, சேலம் உட்பட அரசு கொள்முதல் மையங்களில், தரத்தின் அடிப்படையில், வெண்பட்டுக்கூடுகள், கிலோவுக்கு, சராசரியாக, 500 ரூபாய்க்கும் அதிகமாக விலை கிடைத்தது.நீண்டு இடைவெளிக்குப்பிறகு, பட்டுக்கூடுகளின் விலை கிலோவுக்கு, 500 ரூபாயை விட அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X