கிராம புள்ளி விபரங்கள் சேகரிக்க இன்று முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம புள்ளி விபரங்கள் சேகரிக்க இன்று முகாம்

Added : செப் 03, 2021
Share
உடுமலை;அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமம்வாரியாக விவசாயிகளின் அடிப்படை புள்ளி விபரங்களை சேகரிக்க, இன்று முதல் முகாம் நடத்தப்படுகிறது.தமிழக அரசு, வேளாண்துறை வாயிலாக கிராமந்தோறும் விவசாயம் சார்ந்த, அடிப்படை விபரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது.அதன்படி, ஒவ்வொரு வட்டாரத்திலும், வேளாண்துறையினர், கிராமம் வாரியாக விவசாயிகளின்

உடுமலை;அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமம்வாரியாக விவசாயிகளின் அடிப்படை புள்ளி விபரங்களை சேகரிக்க, இன்று முதல் முகாம் நடத்தப்படுகிறது.தமிழக அரசு, வேளாண்துறை வாயிலாக கிராமந்தோறும் விவசாயம் சார்ந்த, அடிப்படை விபரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது.அதன்படி, ஒவ்வொரு வட்டாரத்திலும், வேளாண்துறையினர், கிராமம் வாரியாக விவசாயிகளின் அடிப்படை புள்ளி விபரங்களை சேகரிக்க, முகாம் நடத்த துவங்கியுள்ளனர்.இம்முகாமில், ஆதார் அட்டை ஜெராக்ஸ், சிட்டா ஜெராக்ஸ், பாங்க் பாஸ் புக் ஜெராக்ஸ், விவசாயி போட்டோ, ஸ்மார்ட் ரேஷன்கார்டு ஜெராக்ஸ் ஆகியவை, தலா-2 வேளாண்துறை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இத்தகைய விபரங்கள் சேகரிப்பு அடிப்படையில், மானியம் உட்பட சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர். முகாம் நடக்கும் விபரங்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஆர்வலர் குழுக்கள் வாயிலாக விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X