பொது செய்தி

தமிழ்நாடு

மாணவனின் உடல் தேடல் தீவிரம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் ஆற்று நீரில், அடித்து செல்லப்பட்ட தனியார் மருத்துவக்கல்லுாரி மாணவனின் உடல், நேற்று நான்காவது நாளாக தேடும் பணி தொடர்ந்தது.சென்னை மேற்கு மாம்பலம், மவுலி அப்பார்ட்மென்ட் குப்பையா தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஸ்ரீராம்,25, கோவையில் தனியார் மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த மாதம், 30ம் தேதி நண்பர்களுடன் வால்பாறை வந்த

வால்பாறை:வால்பாறையில் ஆற்று நீரில், அடித்து செல்லப்பட்ட தனியார் மருத்துவக்கல்லுாரி மாணவனின் உடல், நேற்று நான்காவது நாளாக தேடும் பணி தொடர்ந்தது.சென்னை மேற்கு மாம்பலம், மவுலி அப்பார்ட்மென்ட் குப்பையா தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஸ்ரீராம்,25, கோவையில் தனியார் மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த மாதம், 30ம் தேதி நண்பர்களுடன் வால்பாறை வந்த போது, சோலையாறு அணை சேடல்டேம் பகுதியில் தடையை மீறி குளித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, ஸ்ரீராம் நீர்சூழலில் சிக்கி மாயமானார்.மலைவாழ் மக்கள் உதவியுடன், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், போலீசார் கூட்டமாக இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நான்காவது நாளாக மாணவனை தேடும் பணி நடந்தது. மகனின் உடல் கிடைக்காமல், பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X